திருச்செந்தூர் கடலில் குளிக்கும்போது தொலைந்த தங்கம்.. பதறிய பக்தர் குடும்பம் - சிறிது நேரத்தில் கோயிலுக்குள் நடந்த அதிசயம்..!

Update: 2023-06-05 05:08 GMT

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கடலில் தவறவிட்ட பெண் பக்தரின் தங்க வளையலை, சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் மீட்டுக் கொடுத்தனர். தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த இந்திரா என்பவர், தனது குடும்பத்துடன் திருச்செந்தூருக்கு சென்று கடலில் புனித நீராடினார். அப்போது, இந்திரா கையில் அணிந்திருந்த ஒன்றரை சவரன் தங்க வளையல், தண்ணீர் மாயமானது. இதனிடையே, கடலில் சிப்பி அரித்து கொண்டிருந்த தொழிலாளர்களிடம் தங்க வளையல் கிடைத்த நிலையில், அது குறித்து விசாரித்த போது, இந்திரா தவறவிட்டது தெரியவந்தது. பின்னர், ஒன்றரை சவரன் தங்க வளையலை இந்திராவிடம் சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்