பிக்பாஸ் பிரபலத்தை துரத்தும் லண்டன் காதலி... சமூகவளைதளத்தில் தொடரும் காதல் மோதல்

Update: 2023-07-19 00:59 GMT

லண்டனில் Doctorate ஆராய்ச்சி செய்துக்கொண்டிருக்கும் கிருபா முனுசாமிக்கும், விக்ரமனிற்கும் என்ன தொடர்பு என்கிற புலன் விசாரணையை தொடங்கினோம்.

கிருபா முனுசாமி ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த கருத்துக்கள் விக்ரமனின் உத்தமபுத்திரன் என்கிற அடையாளத்திற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் விதத்திலிருந்தது.

வழக்கறிஞரும், சமூக செயற்பாட்டாளருமான கிருபா முனுசாமிக்கும், விக்ரமனுக்கும் 2013 ஆண்டு முதல் பழக்கம் இருந்திருக்கிறது. இருவரும் காதலித்து வந்ததாகவும் அதற்கு ஆதரமாக சில சேட்டிங்கையும் கிருபா முனுசாமி வெளியீட்டிருக்கிறார்.

காதலிக்கும் போது விக்ரமன் ஐபோன், ஸ்மார்ட் வாட்ச், Airpods போன்ற விலை உயர்ந்த பொருட்களை தன்னை ஏமாற்றி வாங்கியதாகவும் அந்தபெண் தெரிவித்திருக்கிறார். அதோடு, தனியாக யூடியுப் சேனல் தொடங்க வேண்டுமென தன்னிடம் பிட்டு போட்டு கொஞ்சம் கொஞ்சமாக பணம் கறந்ததாகவும், அவர் வாங்கிய காருக்கான Down payment மற்றும் EMI - பணத்தை தன்னை கட்ட வைத்ததாகவும் ஒவ்வொன்றாக புட்டு புட்டு வைத்திருக்கிறார்.

இந்நிலையில், மேற்படிப்பு தொடர்பாக கடந்த 2020 ஆண்டு தான் லண்டன் செல்ல நேர்ந்ததாகவும், அதுவரை குட் மார்னிங் பேபி, லவ் யூ பேபி என கிருபா முனுசாமியை சுற்றி வந்த விக்ரமன் லண்டன் சென்ற பிறகு அவரை கழட்டிவிட்டு பல பெண்களோடு தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டி இருக்கிறார்.

இதில், விக்ரமன் அவரின் மேலாளராக பணியாற்றி வந்த பெண்ணுடன் நெருக்கமான இருப்பதை அவரே தன்னிடம் ஒப்புக்கொண்டதாக கிருபா முனுசாமி கனத்த இதயத்தோடு பதிவிட்டிருக்கிறார். 15 மேற்பட்ட பெண்களை விக்ரம் காதல் போர்வையில் ஏமாற்றியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. அந்த ஹிட்லிஸ்டில் அரசியல் பிரமுகர்களும், சமூகத்தில் செல்வாக்கு மிகுந்தவர்களும் இருப்பதாகவும் சமூக ஊடகங்களில் ஹாட் டாபிக்காக விவாதித்து கொண்டிருக்கிறார்கள்.

இதுதொடர்பாக விக்ரமன் செயல்பட்டு வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமைக்கு புகார் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், சரியான நடவடிக்கை மேற்கொள்ள தாமதிப்பதால் தற்போது பொதுவெளியில் உத்தமபுத்திரனின் உண்மையான முகத்திரையை கிழித்திருப்பதாகவும் தெளிவுப்படுத்தி இருக்கிறார் கிருபா முனுசாமி.

இந்த சம்பவம் தொடர்பாக ஆரம்பத்தில் சைலண்ட் மோடில் இருந்த விக்ரமன் தற்போது அவர் தரப்பு விளக்கங்களையும் அளித்து சமூக ஊடகத்தை அதிர வைத்து vibrate mode-ற்கு கொண்டு வந்திருக்கிறார்.

கிருபா முனுசாமி இடமிருந்து தான் பெற்ற முழு பணத்தையும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதும் ஷெட்டில் செய்துவிட்டதாக கூறி அதற்கான வங்கி பரிவர்த்தனைகளையும் தற்போது வெளியிட்டிருக்கிறார். மேலும் காதல் முறிவிற்கான காரணமும், தன் மீது கலங்கம் ஏற்படுத்துவதற்கான காரணத்தையும் அவர் விரைவில் வெளியீடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரமன் வெளியீட்டுள்ள பதிவில் நாணயத்தின் இரண்டு பக்கங்களை போல கிருபா முனுசாமியின் குற்றச்சாட்டுகளுக்கும் மற்றொரு பக்கம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இது குறித்து பாதிக்கபட்ட பெண் ஆதாரங்களுடன் காவல்துறையிடம் புகார் அளிக்காதது ஏன் என்கிற கேள்வியையும் பலர் முன் வைக்கின்றனர்.

ஒருவேளை கிருபா முனுசாமி சொல்வதை போல விக்ரமன் பல பெண்களிடம் காதலித்து பணம் கறந்திருந்தால் அது அடுத்தடுத்த நாட்களில் ஒவ்வொன்றாக வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்