கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு 2 புள்ளி 9 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவி வழங்க சர்வதேச நாயண நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கையின் அதிகாரிகள் மட்டத்தில் சர்வதேச நாயண நிதியம் நடத்திய பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 48 மாதங்களுக்கான இணக்கத்துடன் 2 புள்ளி 9 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் தொகை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.