"கேளு... எந்த ஜெயில்ல... எல்லா போலீஸ் கிட்டையும் கேளு.." - வெளியான பரபரப்பு ஆடியோ - வீட்டில் போலீஸ் பாதுகாப்பு
காஞ்சிபுரத்தில் ரவுடி ஒருவரின் பெயரை கூறி, அரிசி வியாபாரி ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டிய நபரின் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரிசி கடைக்காரருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியை சேர்ந்தவர் தியாகு. இவர் அதே பகுதியில் அரிசி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான பிரபா என்பவர் மூலம், சிறையில் இருக்கும் ரவுடி தியாகுவின் பெயரை பயன்படுத்தி அரிசி கடைக்காரரிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதன் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.