குருவிமலை பட்டாசு ஆலை வெடி விபத்து சம்பவம்... "லாப நோக்கத்துடன் செயல்படுவதால் விபத்து" - சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் விளக்கம்

Update: 2023-03-23 13:50 GMT

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

பட்டாசு விபத்துகளை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதில், குருவிமலை விபத்தில் உயிரிழந்த 9 பேர் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு நன்றி கூறியிருந்தார். தீர்மானத்தின் மீது பேசிய உறுப்பினர்கள், சில கோரிக்கைகளை முன்வைத்தனர். இதற்கு பதிலளித்த வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சிறிய பட்டாசு ஆலைகள் லாப நோக்கத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவதால்தான் விபத்து ஏற்படுவதாக கூறினார். திருவிழாவுக்கு அதிகளவு ஆட்களைக் கொண்டு பட்டாசு தயாரித்ததன் காரணமாக, குருவிமலை விபத்து நடந்துள்ளதாக அவர் விளக்கம் அளித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்