தமிழக ஆளுநர் நிலுவையில் உள்ள மசோதாக்கள் - போஸ்டர் அடித்து ஒட்டிய திமுக கவுன்சிலர்

Update: 2022-12-10 17:02 GMT

தமிழக ஆளுநர் ரவி நிலுவையில் வைத்துள்ள 22 மசோதாக்களை, சுவரொட்டிகளாக அடித்து, கோவை மாநகரின் முக்கிய இடங்களில், திமுக கவுன்சிலர் ஒருவர் ஒட்டியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சி நான்காவது வார்டு கவுன்சிலராக இருக்கும் கதிர்வேல், ஆளுநர் ரவியை விமர்சிக்கும் வகையிலான சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார். அதில் " ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை " என்றும் தமிழக ஆளுநருக்கு ஆண்டுக்கு 6.5 கோடி செலவாவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்