- 1953இல் உள்நாட்டுப் போரின் முடிவில், கொரியா இரண்டாக பிரிக்கப்பட்டது.
- அதைத் தொடர்ந்து, தென் கொரியாவை கைபற்றுவோம் என்று வட கொரிய அதிபர்கள் அவ்வப்போது மிரட்டுவது, கடந்த 70 ஆண்டுகளாக தொடர்கிறது.
- தென் கொரியாவை பாதுகாக்க சுமார் 28 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் மற்றும் ஏராளமான போர் விமானங்கள் தென் கொரியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
- இந்நிலையில் அமெரிக்க, தென் கொரிய ராணுவனங்கள் அணு ஆயுதங்களுடன், கூட்டாக போர் ஒத்திகை பயிற்சிகளில் ஈடுப்பட்டதாக கிம் ஜாங் உன் குற்றம் சாட்டியுள்ளார்.
- வட கொரியா மீது இவை இரண்டும் போர் தொடுப்பதை தடுத்து நிறுத்த, அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு வட கொரிய ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
- இதைத் தொடர்ந்து அணு ஆயுத தாக்குதலுக்கான, இரண்டு நாள் போர் ஒத்திகை ஒன்றை வட கொரிய ராணுவம் சமீபத்தில் நடத்தியுள்ளது.