மருத்துவ சிகிச்சைக்குக் கூட பணமின்றி தவித்த கக்கனின் மகன் - உதவும் முதல்வர் ஸ்டாலின்..

Update: 2022-09-09 16:05 GMT

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கக்கனின் மகன் பாக்கியநாதனுக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது...

தமிழக அரசியலில் எளிமையின் சின்னமாகவும், நேர்மைக்கு இலக்கணமாகவும் திகழ்ந்து வாழ்ந்து மறைந்தவர் முன்னாள் அமைச்சர் கக்கன்... அவரது மகன்களில் ஒருவரான பாக்கியநாதன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உடல் நலன் குன்றி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு பரிசோதனை செய்ததில் ஆஞ்சியோ சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதனையடுத்து அவரது குடும்பத்தினர் முதல்வருக்கு மருத்துவ உதவி கேட்டு கடிதம் எழுதிய நிலையில், பாக்கியநாதனின் மருத்துவ சிகிச்சைக்கான செலவை தமிழக அரசே தற்போது ஏற்றுள்ளது.

மேலும் அவருக்கு சிறப்பு பிரிவில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்