வீட்டில் இட்லி சாப்பிட்டவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு... உடன் சாப்பிட்ட 4 பேர் கவலைக்கிடம்

Update: 2023-04-03 03:17 GMT
  • கேரள மாநிலம், திருச்சூரில் வீட்டில் இட்லி சாப்பிட்டவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
  • திருச்சூரில் உள்ள அவனூரைச் சேர்ந்த சுசீந்திரன் என்பவரின் வீட்டில் இன்று காலை இட்லி சமைத்துள்ளனர்.
  • அந்த இட்லியை சுசீந்திரன், அவருடைய மனைவி கீதா, தாயார் கமலா, தேங்காய் பறித்துக் கொடுக்க வந்த தொழிலாளர்களான ஸ்ரீராமச்சந்திரன், சந்திரன் ஆகிய ஐந்து பேரும் சாப்பிட்டுள்ளனர்.
  • சாப்பிட்ட சிறிது நேரத்தில் சுசீந்திரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ரத்த வாந்தி எடுத்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது அவர் உயிரிழந்தார்.
  • சுசீந்திரனின் மனைவி கீதா , தாயார் கமலா, தென்னை மர தொழிலாளர்கள் ஆகியோருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • அவர்கள் சாப்பிட்ட உணவு விஷமானதா அல்லது உணவில் விஷம் கலக்கப்பட்டதா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்