ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட தாய் மற்றும் குழந்தைகள் - தீவிர விசாரணையில் போலீசார்
- கேரளாவில் இரண்டு குழந்தைகளுடன் தாய் ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- கேரளா மாநிலம், புனலூரில் அமைந்துள்ள கல்லடை ஆற்றுப் பகதி அருகே ஒரு பெண் இரண்டு குழந்தைகளுடன் சென்றதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.
- வெகு நேரமாகியும் அவர்கள் திரும்பி வராததால், சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் அவர்களை தேடிப் பார்த்துள்ளனர்.
- இதையடுத்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், ஆற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
- இதில், மூவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.
- சடலங்கள் மீட்கப்பட்டு உடற்கூராய்விற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், முதற்கட்ட விசாரணையில் அப்பெண்ணின் பெயர் ரம்யா ராஜ் எனத் தெரியவந்துள்ளது.
- சம்பவம் தொடர்பாக போலீசார் கூடுதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.