கண்ட்ரோல் மீறி பறந்த கார்.. நடந்து சென்றவருக்கு நேர்ந்த சோகம் - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி...

Update: 2023-02-10 09:56 GMT

கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே அதிவேகமாக வந்த கார் மோதியதில், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஆசிரியர் உயிரிழந்தார்.

குண்ணமங்கலத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராஜு, சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தபோது எர்ணாகுளத்தில் இருந்து அதிவேகமாக வந்த சொகுசு கார், அவர் மீது மோதியது.

இவ்விபத்தில் ராஜு சம்பவ இடத்திலேயே பலியானார். கார் ஓட்டுனரின் அலட்சியத்தால் இந்த விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்