கீழ்பவானி வாய்க்காலில் திடீர் உடைப்பு நூல் உற்பத்தி ஆலையை சூழ்ந்த தண்ணீர் - 30 தொழிலாளர்கள் மீட்பு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே வெள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்கள் 30 பேரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

Update: 2022-12-11 16:15 GMT

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்காலில் வேளாண் பணிகளுக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக பெய்த கனமழையால், கீழ் பவானி கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பெருந்துறை அருகே கீழ் பவானி பிரதான கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. பாலப்பாளையம் பகுதியில் உள்ள நூல் உற்பத்தி ஆலையை தண்ணீர் சூழ்ந்ததால், அங்கு பணியில் இருந்த 30 தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர். தொடர்ந்து, தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினர் தொழிலாளர்களை பத்திரமாக மீட்டனர். கால்வாயில் ஏற்பட்ட உடைப்பால், பெருந்துறை பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. நெல், கரும்பு, வாழை, மஞ்சள் போன்ற பயிர்களை முழுவதும் தண்ணீரில் முழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்