ஓபிஎஸ் வாபஸ் ஏன்?.. "மிக குறைந்த வாக்கு.. அசிங்கப்படுத்த வேண்டாம்" - ரகசியத்தை உடைத்த ஓபிஎஸ் ஆதரவாளர்

Update: 2023-04-24 04:39 GMT
  • ஓபிஎஸ் தரப்பில் நாளை மாநாடு நடைபெற உள்ள நிலையில், கர்நாடகாவில் அதிமுக பெயரில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த குமார் உள்ளிட்ட ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள் திடீரென வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
  • கர்நாடகாவில் அதிமுக பெயரில் மூன்று வேட்பாளர்களை ஓபிஎஸ் தரப்பு அறிவித்த‌து.
  • அதில் காந்திநகர் வேட்பாளர் குமாரை அதிமுக வேட்பாளராக தேர்தல் ஆணையம் அறிவித்த‌து.
  • ஆனால், அதிமுகவின் பெயரை மோசடியாக பயன்படுத்தியதாக கர்நாடக மாநில அதிமுக சார்பில் புகார் அளித்த‌தால், விளக்கம் கேட்டு வேட்பாளர் குமாருக்கு நோட்டீஸ் அனுப்ப‌ப்படும் என தேர்தல் ஆணையம் கூறியது
  • . இந்நிலையில், திடீரென தங்கள் தரப்பு வேட்பாளர்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவார்கள் என ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது.
  • இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, தங்கள் தரப்பு வேட்பாளர்கள் வேட்புமனுக்களை திரும்ப‌ப் பெறுவார்கள் என்றார்.
  • யாருக்கும் பயந்தோ, நெருக்கடியாலோ வேட்பு மனுவை திரும்ப‌ப் பெறவில்லை என்ற அவர், மிகக் குறைவான வாக்குகள் பெற்று அசிங்கப்படுத்த வேண்டாம் என்பதால் இந்த முடிவு எடுத்த‌தாக தெரிவித்தார்.
  • நாளை ஓபிஎஸ் சார்பில் மாநாடு நடைபெற உள்ள நிலையில், திடீரென வேட்பாளர்களை திரும்ப‌ப் பெற்றது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்