மனைவி ஸ்லோ பாய்சன் கொடுத்ததை வாட்ஸ்அப் பார்த்து அறிந்த கணவன் - கல்யாணமாகி 2 மாதத்தில் பயங்கரம்

Update: 2022-11-14 07:09 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே, விஷம் கொடுத்து கொல்ல முயற்சித்ததாக, கணவன் அளித்த புகாரை அடுத்து, மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரணியல் அருகே தாந்தவிளை பகுதியை சேர்ந்த வடிவேல் முருகன் என்பவருக்கும், நாகர்கோவில் மாவட்டத்தைச் சேர்ந்த சுஜா என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் மகிழ்ச்சியாக இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில், திடீரெ வீட்டில், வடிவேல் முருகன் மயக்கமடைந்து நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், சில நாட்களாக மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த வடிவேல் முருகன், அவரது செல்போனை எடுத்து வாட்ஸ் ஆப்பை சோதனை செய்துள்ளார். அதில், வேறொரு நபருடன் மனைவி தகாத உறவில் இருப்பது தெரியவந்ததுடன், தனக்கு ஸ்லோ பாய்சன் அளித்து வருவதாகக் கூறியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர், தனது மனைவி மீது அளித்த புகாரை அடுத்து, சுஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்