இந்தியாவுக்குள் ரகசியமாக வந்த மன்னர் சார்லஸ்? - பரபரப்பு காரணம்

Update: 2024-10-31 06:50 GMT

இந்தியாவுக்குள் ரகசியமாக வந்த மன்னர் சார்லஸ்? - பரபரப்பு காரணம்

இங்கிலாந்து மன்னர் சார்லஸ், ராணி கமிலா பெங்களூருவில் சிகிச்சை பெற்றதாக வெளியான தகவலை உறுதிப்படுத்த காவல்துறையும், மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.

பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதியில் உள்ள இயற்கை ஆயுர்வேத சிகிச்சை மையம் ஒன்றில், இங்கிலாந்து மன்னர் சார்லஸ், ராணி கமிலா மூன்று நாட்கள் சிகிச்சை பெற்று நாடு திரும்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. மன்னர் மிகவும் ரகசியமாக தனி விமான மூலம் பெங்களூர் வந்ததாகவும், அவருக்காக எந்த போக்குவரத்து மாற்றவும் செய்யப்படவில்லை என்றும் சாதாரண மக்களைப் போல் பெங்களூரு போக்குவரத்து மிகுந்த சாலையில் பயணித்து சிகிச்சை மையத்திற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகமும், பெங்களூரு காவல்துறையும் மறுத்துள்ளது. உலகையே கட்டியாண்ட இங்கிலாந்து நாட்டின் மன்னர் மிக சாதாரணமாக எந்த ஆடம்பரமும் இல்லாமல் இந்தியா வந்து சிகிச்சை பெற்றுச் சென்றதாக இணைய தளங்களில் செய்தி பரவி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்