'கள்ளக்குறிச்சி வன்முறை'.. தொடரும் வேட்டை - அதிகாரிகள் அதிரடி.. பள்ளி சுவற்றை சேதப்படுத்தியவர் கைது
கள்ளக்குறிச்சி வன்முறையின் போது பள்ளியின் சுவற்றை இடித்து சேதப்படுத்தியதாக இளைஞர் ஒருவரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் கடந்த 17ஆம் தேதி நடந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்து வருகின்றனர். இதில் பள்ளியின் சுவற்றை சம்மட்டியால் இடித்து சேதப்படுத்தியதாக வண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மணிஷ் என்ற இளைஞரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்துள்ளனர். அதேபோல் வன்முறையில் ஈடுபட்டதாக உலங்காத்தான் பகுதியை சேர்ந்த வசந்த், சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார், கார்த்திக் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.