2010 ஆம் ஆண்டு வங்கியில் அடகு வைத்த நகைகள் திருட்டு - 10 ஆண்டுகளாக தொடரும் போராட்டம் - ஆத்திரம் அடைந்து வங்கியை முற்றுகையிட்ட விவசாயிகள்

Update: 2022-12-20 12:56 GMT

போலீஸாரிலேயே தள்ளுமுள்ளு - சமாதானம் செய்து அனுப்பி வைத்த போலீசார் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது இந்த வங்கியில் சுற்று வட்டார கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் நகைகளை விவசாய பணிக்காக அடகு வைத்து வந்துள்ளனர் இந்த நிலையில் இந்த வங்கியில் கடந்த 2010 ஆம் ஆண்டு இந்த வங்கியில் 493 விவசாயிகள் அடகு வைத்த 1790 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர் இது சம்பந்தமாக திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த நிலையில் கிராம விவசாயிகள் தங்கள் நகைகளை ஒப்படைக்க வேண்டுமென கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர் இந்த நிலையில் இது வரை நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து 500-க்கும் மேற்பட்டோர் இன்று திருநாவலூர் வேளாண்மை கூட்டுறவு வங்கியை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர் அப்பொழுது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது தொடர்ந்து போலீஸ்காரர் வைத்திருந்த பேரிக்காடுகளை தள்ளிவிட்டு போராட்டக்காரர்கள் முன்னேறிச் சென்று வங்கியில் முன்பு ஓடிவந்து வங்கியை கையகப்படுத்த முயற்சித்தனர் அப்பொழுது வங்கி முன்பு போடப்பட்டிருந்த போலீசார்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் நீண்ட நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்