கலாஷேத்ரா பாலியல் விவகாரம் -தொடர்ந்து 2வது நாளாக 30 மாணவிகளிடம் விசாரணை நிறைவு

Update: 2023-04-12 10:53 GMT
  • கலாஷேத்ரா கல்லூரியில் இரண்டாவது நாளாக நடைபெற்ற மாநில மனித உரிமைகள் ஆணைய விசாரணை நிறைவு
  • 30 மாணவர்களிடம் தனியாக விசாரணை நடைபெற்றது
  • மாணவர்கள் விசாரணையில் சுதந்திரமாக பேசுவதற்காக நிர்வாகத்தினர் உட்பட யாரும் இல்லாமல் தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது
  • சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார் தெரிவித்து மாணவிகள் போராட்டம் நடத்திய விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.
  • இது குறித்து விசாரித்து 6 வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க மாநில மனித உரிமைகள் ஆணைய விசாரணை பிரிவு இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளது.
  • இந்நிலையில், இதுகுறித்த விசாரணையை நேற்று மாநில மனித உரிமைகள் ஆணைய விசாரணை பிரிவு காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையிலான குழுவினர் தொடங்கினர். நேற்று கல்லூரியின் இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்குனர் பத்மாவதி ,முதல்வர் பகல ராம்தாஸ் ஆகியோரிடம் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்ற நிலையில், இன்றும், இரண்டாவது நாளாக மகேஸ்வரன் எஸ்.பி தலைமையிலான குழுவினர் 30 மாணவர்களிடம் ருக்மணி அரங்கத்தில் விசாரணை நடத்தினர்.
  • சரியாக 2.10 மணிக்கு வருகை தந்து 2.20 மணிக்குள் விசாரணையை நிறைவு செய்தனர்.
  • மாணவர்கள் சுதந்திரமாக ஆணையத்திடம் தங்களது கருத்துக்களை, புகாரினை தெரிவிக்கும் வகையில் கல்லூரி நிர்வாகத்தினர் உட்பட யாரையும் விசாரணையின் போது உள்ளே அனுமதிக்காது தனியாக மாணவர்களிடம் மட்டும் ஆணைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்