#JUSTIN || நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - 4 பேர் கைது

Update: 2023-07-04 10:22 GMT

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த கும்பல் நான்கு பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

ஒரு நபருக்கு தேர்வு எழுத வேண்டுமென்றால் 7 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது

தேசிய அளவில் நடைபெறும் நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட கும்பலை டெல்லி போலீசார் இன்று கைது செய்தனர்.

டெல்லியில் எய்ம்ஸ் இரண்டாம் ஆண்டு படிக்கும் நரேஷ் பிஷ்ரோய் என்பவர்தான் இந்த கும்பலுக்கு தலைமை தாங்கியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. எய்ம்ஸில்

எய்ம்ஸில் உள்ள பல மாணவர்களிடம் பணம் தருவதாகக் கூறி பிஷ்ரோய் பலரைக் கும்பலில் சேர்த்ததாகக் கூறப்படுகிறது

பின்னர், முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களை, நாடு முழுவதும் நடைபெறும் நீட் தேர்வில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு பதிலாக எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிஷ்ரோய், சஞ்சு யாதவ், மஹாவீர், ஜிதேந்திரா உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.

குற்றவாளிகளிடம் இருந்து லேப்டாப் மற்றும் செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், தேர்வில் முறைகேடு செய்த ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் தலா 7 லட்சம் ரூபாய் வசூலித்ததாக பிஷ்ரோய் தெரிவித்தார் .

போலீசார் தற்போது இது குறித்து விசாரணை நடத்தி, இந்த மோசடியில் மேலும் மாணவர்கள் யாராவது ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்