'உயிர்த்தெழுந்தார் இயேசு கிறிஸ்து' ...அரங்கேற்றப்பட்ட உயிர்த்தெழுந்த காட்சி
ஈஸ்டர் திருநாளை ஒட்டி, சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில், சிறப்பு ஆராதனைகள், ஜெபங்கள் நடைபெற்ற பிறகு, இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நிகழ்வு அரங்கேற்றப்பட்டது. அந்த நிகழ்வை வான வேடிக்கைகளுடன் கிறிஸ்தவர்கள் வரவேற்றனர். தொடர்ந்து, திருப்பலியில் பூஜிக்கப்பட்ட தீர்த்தத்தை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையிலான பாதிரியார்கள், கிறிஸ்தவர்கள் மீது தெளித்து அருளாசி வழங்கினர்.