ஜெகன் மோகன் ரெட்டி மீது தங்கை ஊழல் புகார் - சூடுபிடிக்கும் அரசியல் களம்
டெல்லி சென்றுள்ள ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா, தெலங்கானா அரசு மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது, தெலங்கானா அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது.
கடந்த ஆண்டு தனது அண்ணன் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.ஆர்.எஸ் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த ஷர்மிளா, ஒய்.ஆர்.எஸ் தெலங்கானா என்ற புதிய கட்சியை நிறுவியிருந்தார்.
ஓராண்டு காலமாக தெலங்கானாவில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் அவர், திடீரென டெல்லியில் சிபிஐ இயக்குனரை சந்தித்தார்.
அப்போது, தெலங்கானாவில் காலேஸ்வரம் பல் நோக்கு உயர் மட்ட நீர்பாசன திட்டத்திற்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ள ஒரு லட்சம் கோடி ரூபாயில் ஊழல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டினார்.
இது தொடர்பான வழக்கை விசாரிக்க டிஐஜி அதிகாரி ஒருவரை சிபிஐ இயக்குனர் நியமித்திருப்பதாகவும் ஷர்மிளா தெரிவித்துள்ளார்.