கேரள மாநிலத்தில் தொடரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சூறை காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பத்தனம் திட்டா மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. கல்லுப்பாறை கீறு, வள்ளிபாடியில், வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளில் இருந்து பொதுமக்களை தீயணைப்புபடையினர் பத்திரமாக மீட்டனர். இதனிடையே கனமழைக்கு நேற்று மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் தங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களில் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அடுத்த இரண்டு நாட்களில் மழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது....