NETFLIX மாதிரி ஆகிறதா ட்விட்டர்..? ப்ளூ டிக் சந்தாதாரர்களுக்கு மஸ்க் கொடுத்த அல்டிமேட் ஆஃபர்
ப்ளூ டிக் பெற்ற சந்தாதாரர்கள் இனி ட்விட்டரில் 2 மணி நேர வீடியோக்களைப் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என ட்விட்டர் CEO எலான் மஸ்க் அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்...
இதன் மூலம் இனி, 8GB அளவுள்ள 2 மணி நேரம் ஓடும் அதாவது 1 முழு திரைப்படத்தின் அளவிலான வீடியோவைக் கூட இனி ப்ளூ டிக் சந்தாதாரர்களால் பதிவேற்றம் செய்ய இயலும்... வழக்கம் போல் பலர் மஸ்க்கின் இந்த அதிரடி நடவடிக்கையைப் பாராட்டினாலும், சிலர் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்... ஒரு சிலர் ட்விட்டர் தான் புதிய நெட்ஃப்ளிக்ஸ் என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகின்றனர்.