ஓய்வு பற்றி முடிவெடுக்க இன்னும் நிறைய நேரம் இருப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார். 41 வயதாகும் தோனிக்கு நடப்பு ஐபிஎல் தொடர், கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தொடருடன் தோனி ஓய்வு பெற்று விடுவார் போன்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. இத்தகைய சூழலில், நிகழ்ச்சி ஒன்றில் தோனியிடம் ஓய்வு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த தோனி, ஓய்வு பற்றி யோசிக்க இன்னும் நேரம் இருப்பதாகவும், நடப்பு தொடரில் சென்னை அணிக்கு இன்னும் நிறைய ஆட்டங்கள் எஞ்சி இருப்பதாகவும் கூறினார். தற்போது, ஓய்வு பற்றி தான் பேசினால் அணியின் பயிற்சியாளருக்கு அழுத்தம் ஏற்படும் என்றும், சிரித்துக் கொண்டே தோனி பதில் அளித்தார்.