தட்கல் மற்றும் பிரீமியம் தட்கலில் குளறுபடிகள் - ரயில்வே நிர்வாகத்தின் மீது பயணிகள் புகார்

Update: 2023-05-20 02:22 GMT

தட்கல் டிக்கெட் முன்பதிவில் வெளிப்படைத்தன்மை இல்லையென ரயில்வே நிர்வாகம் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்...

ரயிலில் பயணம் செய்வதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே பொதுமக்கள் முன்பதிவு செய்ய வேண்டிய நிர்பந்தம் இருந்து வருகிறது. அவ்வாறு முடியாத பட்சத்தில், உடனயாக பயணம் செல்லவிருப்போர், தட்கல் முறையில் டிக்கெட் பதிவு செய்வர். இந்த தட்கல் பதிவில், ஒரு நாளைக்கு முன்பாக காலை 10 மணிக்கு குளிர்சாதன பெட்டிகளுக்கும், 11 மணிக்கு தூங்கும் வசதி கொண்ட பெட்டிக்கும் டிக்கெட் பதிவு தொடங்கும். ஆனால், சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்து விடுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், அச்சயமத்தில் IRCTC தளமும் சரியாக இயங்குவதில்லை எனக் மக்கள் கூறுகின்றனர். எனினும், சில நிமிடங்களிலேயே பிரீமியம் தட்கலில் டிக்கெட் முன்பதிவு செய்ய சுலபமாக இருப்பதாக கூறுகின்றனர். பிரீமியம் தட்கலில் விலை இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதால், ரயில்வே நிர்வாகமே தட்கல் முறையை சரியாக செயல்படுத்துவதில்லை என்பது மக்களி குற்றச்சாட்டாக இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்