ஐபிஎல் டிக்கெட் விற்பனை தொடக்கம் - விடிய விடிய சேப்பாக்கத்தை சுற்றி காத்திருந்த ரசிகர்கள்

Update: 2023-04-27 02:08 GMT

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு டிக்கெட் வாங்குவதற்காக ரசிகர்கள் இரவு முழுவதும் காத்திருந்தனர்.சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 30-ஆம் தேதி நடைபெறும் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதிக் கொள்கின்றன. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கப்பட உள்ள நிலையில், நேற்று இரவு முதலே நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சுற்றிலும் காத்திருந்தனர். கூட்ட நெரிசலை தவிர்க்க போலீசார் தடுப்புகளை வைத்துள்ளனர். ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள், ஆயிரத்து 500 ரூபாய் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை பல்வேறு விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்