இன்னோவா காருக்கு டஃப் கொடுக்கும் Invicto..."காரே நொறுங்குனாலும் உயிருக்கு உத்தரவாதம்"...அட்டகாசமான அம்சங்கள்.. அதிரடி வசதிகள்
மாருதி சுஸுகி தனது புதிய தயாரிப்பான Invicto காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கிறது. இதன் சிறப்பம்சங்கள் சிலவற்றை தற்போது பார்கலாம்......
இந்தியாவில் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான Maruti Suzuki அதன் பிரீமியம் Invicto MPV காரை தற்போது அறிமுகம் செய்துள்ளது.மாருதி சுசூகி நிறுவனம் எம்பிவி (MPV) பிரிவில் பல கார்களை ஏற்கனவே அறிமுகம் செய்திருந்தாலும், Invicto மிகவும் ஸ்பெஷல் என்றே சொல்லப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் டோயோட்டா தான். ஏற்கனவே இந்த இரு நிறுவனங்களும் இணைந்து பல கார்களை விற்பனை செய்து வருகின்றன.
இந்த invicto காரில் ஒரு ஷார்ப் லைன் டிசைன் காரின் முன்பக்கம்,பின்பக்கம் மற்றும் அதன் இரு புறங்களிலும் இருப்பதால் இது மிகவும் அழகாக தோற்றமளிக்கிறது. காரின் முன்பக்கத்தில் உயர்த்தப்பட்ட அமைப்பும் அகலமான பாடி மற்றும் NEXA கார்களுக்கே உரித்தான கிரோம் க்ரில், ட்வின் LED ஹெட் லைட் , Tre LED டைல் லைட் மற்றும் DRLS இடம்பெற்றுள்ளது.
மேலும் அகலமான ஏர் வென்ட், ஸ்கிட் பிளேட், கார் வீலின் மேற்புறம் பிளாஸ்டிக் கிளாடிங், அலாய் வீல் டிசைன், Invicto பேட்ஜ் போன்றவை இதை மேலும் மெருகேற்றி காட்டுகிறது.
இதில் 2.0 லிட்டர் TNGA Strong ஹைபிரிட் 4 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது மேலும் 186 PS பவர் மற்றும் 206 NM டார்க் கொண்டுள்ளது
2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்ட காரில் ஹைப்ரிட் மோட்டார் உடன் வருவதால் 23 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் e-CVT கியர் பாக்ஸ் டிரான்ஸ்மிஷன் வசதியும் உள்ளது மேலும் இதன் ஹைபிரிட் ஒரு Self Charging வகை ஆகும்.
இந்த காரின் உட்புறம் ஒரு பிரீமியம் டூயல் டோன் பிளாக்/பிரவுன் தீம் கொண்ட டேஷ் போர்டு மற்றும் இன்டீரியர் சாப்ட் தீம் இடம்பெற்றுள்ளது. அதில் 10.1 இன்ச் SmartPlay Pro+ டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, 50'க்கும் மேற்பட்ட கனெக்டெட் கார் வசதிகள், மிகப்பெரிய டூயல் பேன் பேனரோமிக் சன் ரூப் வசதி உள்ளது.மேலும் கூடுதலாக இந்த காரில் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ஸ்டேரிங் மவுண்ட் கன்ட்ரோல், கிருஸ் கன்ட்ரோல், மல்டி டிஸ்பிளே, பிரீமியம் Ottoman சீட், வென்டிலேட் மற்றும் பவர் சீட், கூல் க்ளோவ் பாக்ஸ் மற்றும் எலக்ட்ரிக் பவர் கொண்டு இயக்க தனியாக EV Mode டிரைவிங் வசதியும் இடம்பெற்றுள்ளது.
இந்த காரில் அதிநவீன பாதுகாப்பு அம்சங்களாக 6 ஏர் பேக் வசதி, எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், முன்பக்க மற்றும் பின்பக்க பார்க்கிங் சென்சார், அதிக தரமான ஸ்டீல் மூலம் செய்யப்பட்ட பாடி கட்டமைப்பு, 360 டிகிரி கேமரா வசதியும் உள்ளது.
மாருதி சுசூகி முதல் முறையாக 20லட்சம் ரூபாய்க்கும் அதிகமான விலைக்கு புதிய கார்களை அறிமுகம் செய்து ஆடம்பர பிரிவுக்குள் நுழைந்த நிலையில் அதன் பங்குகள் வரலாறு காணாத வகையில் அதிரடியாக அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு உள்ளது.