#BREAKING | பிபிசி நிறுவனத்தில் ஆய்வு- முதல்வர் ஸ்டாலின் கண்டனம் | BBC | MKStalin | ThanthiTV
டெல்லியில் உள்ள பிபிசி நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சர்வேக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம், எந்தவொரு துடிப்பான ஜனநாயகத்துக்கும், வெளிப்படைத் தன்மையோடும், சுதந்திரமாகவும் செயல்படும் அமைப்புகள் இன்றியமையாதவை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை அமைப்புகளை அரசியல் கருவிகளாக அரசியல் எதிரிகளை குறிவைத்துத் தாக்க அளவுகடந்து பயன்படுத்தப்படுகின்றன, இந்த கருவிகளின் பட்டியலில் BBC நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரி "சர்வே"-யும் புதிதாக இணைந்துள்ளது- முதல்வர் ஸ்டாலின், ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, ஜனநாயகத்தை, ஊடக சுதந்திரத்தை பாழடித்து வருவதற்கு காரணமானவர்களுக்கு, தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்"