உக்ரைனின் செவரோடொன்ஸ்க் நகரை பதம் பார்க்கும் ரஷ்ய பீரங்கிகள் | ரசாயன ஆலையில் தஞ்சம் புகும் மக்கள்

Update: 2022-06-13 15:20 GMT

உக்ரைனின் டான்பாஸ் பகுதியை பிடிக்க அந்நாட்டின் கிழக்கு பகுதியில் ரஷ்யா போரை தீவிரப்படுத்தியிருக்கிறது. அப்பகுதியில் இருக்கும் செவரோடோனெட்ஸ்க் நகரில் ரஷ்யா பீரங்கி தாக்குதலையும் அதிகரித்துள்ளது. இதனால் நகரம் அழிந்துவருவதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்து வருகிறார்கள். நகரின் 70 சதவீத பகுதியை கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய தரப்பு தெரிவிக்கிறது. உக்ரைனையும் செவரோடோனெட்ஸ்க் நகரையும் இணைக்கும் பாலங்கள் சிதைக்கப்பட்டதாக ரஷ்ய ஆதரவுப்பெற்ற கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். போர் அங்கு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மக்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வெளியேறிவருகிறார்கள். பலர் அங்குள்ள ரசாயன ஆலையில் தஞ்சம் அடைந்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்