காதலியிடம் காசு வாங்கி கம்பி எண்ணும் காதலன் - இன்ஸ்டா காதலால் வந்த இம்சை
- சென்னையில் இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணுடன் பழகி பண மோசடியில் ஈடுபட்ட காதலனை போலீசார் கைது செய்தனர்.
- சென்னை ராயபுரம் அப்பையர் பகுதியில் வசித்து வரும், ருக்ஷனாவுக்கும், பழவந்தாங்கல் பகுதியில் வசித்து வரும் மகேஷ் என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
- இந்நிலையில் மகேஷ், தனது குடும்ப ஏழ்மையை கூறி, ருக்ஷனாவிடம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.
- ஆனால், பணத்தை திருப்பி தராமல் மகேஷ் அலைகழித்து வந்த நிலையில், இது குறித்து ருக்ஷனா ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
- அதன் பேரில், காதலன் மகேஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.