கனடாவில் மதவெறி வன்முறைகள் என புகார் மீது நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்தல்

Update: 2022-09-24 03:34 GMT

கனடாவில் மதவெறி வன்முறைகள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆகியவற்றின் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது.

குற்றச்சம்பவங்கள் குறித்து, கனட அதிகாரிகளிடம், எடுத்துக் கூறி, குற்றங்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு இந்திய தூதரகம் கேட்டு கொண்டுள்ளது.

இந்தக் குற்றங்களைச் செய்த குற்றவாளிகள் இது வரை கனடாவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்றும், கனடாவில் உள்ள இந்தியப் பிரஜைகள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் எச்சரிக்கையுடன் மற்றும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்