"எரிசக்தி துறையில் இனி இந்தியாதான்" - பெரும் கனவோடு பிரதமர் மோடி... | PM Modi

Update: 2023-02-06 14:19 GMT

பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் நடைபெறும் எரிசக்தி வார நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார்...

இந்நிகழ்வில், கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஆகியோரும் கலந்து கொண்டனர்...

இந்திய எரிசக்தி வார நிகழ்ச்சியின் முக்கிய அம்சமான இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து மறு சுழற்சி செய்த சீருடை மற்றும் சூரிய சக்தியில் செயலாற்றும் அடுப்பை நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், எதிர்காலத்தில் எரிசக்தி துறையில் வல்லமை படைத்த நாடாக இந்தியா உருவாகும் என நம்புவதாகத் தெரிவித்தார்.

மேலும், நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் இணைய வசதி, 6 லட்சம் கிலோ மீட்டர் பைபர் இணைய வசதி ஆகியவை செயல்படுத்தப் பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்தியா உலகில் 2வது பெரிய செல்போன் உற்பத்தி எண்ணிக்கையை கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

உள்ளூர் உற்பத்தியை, அதிகரித்து, விநியோக சங்கிலியை முறைப்படுத்தி, மாற்று எரிசக்திகளை உபயோகித்து, சுற்றுச்சூழலுக்கு மாசை ஏற்படுத்தாத வாகனங்களைப் பயன்படுத்தினால் எரிசக்தி துறையில் தன்னிறைவு அடையலாம் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்