100 ஆண்டுகளாக நம்பர் 1-ல் இருந்த சீனா இடத்தை பிடித்தது இந்தியா

Update: 2023-06-13 09:08 GMT

சீனாவில் மக்கள் தொகை குறைந்துள்ள நிலையில், தற்போது திருமண பதிவுகளின் எண்ணிக்கையும் சரிந்துள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது

கடந்த நூறு ஆண்டுகளாக மக்கள் தொகையில் உலகின் நம்பர் ஒன் நாடாக கோலோச்சிய சீனாவை, இந்தியா சமீபத்தில் முந்தியது.

2022ல், கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக சீனாவின் மக்கள் தொகை 8.5 லட்சம் அளவுக்கு சரிந்து, 141.1 கோடியாக குறைந்தது. அதே சமயத்தில் இந்தியாவின் மக்கள் தொகை 142 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சீனாவில் நடைபெறும் திருமணங்களின் மொத்த எண்ணிக்கை, 2022ல், 68.3 லட்சமாக, 2021இன் அளவை விட 8 லட்சம் அளவுக்கு குறைந்துள்ளதாக சீன உள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக திருமண பதிவுகள் தொடர்ந்து சரிந்து வருவதாகவும், கொரோனா கால ஊரடங்குகளினால், திருமணங் களின் எண்ணிக்கை வெகுவாக சரிந்துள்ள தாகவும் கூறப்படுகிறது.

சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் கடந்த ஆண்டு 1,000 பேருக்கு 6.77 குழந்தைகளாகக் குறைந்துள்ளது. இது 2021ல் 7.52 ஆக இருந்தது.

மக்கள் தொகையை அதிகரிக்கச் செய்ய, திருமணங்களை ஊக்குவிக்கவும், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும், கடந்த மாதம் 20 நகரங்களில் புதிய திட்டங்களை தொடங்கியுள்ளது சீனா.

அதன்படி, 3 குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சில மாகாணங்கள், இளம் புதுமணத் தம்பதிகளுக்கு ஊதியத்துடன் கூடிய திருமண விடுமுறை காலத்தை நீட்டிப்பு செய்துள்ளது.

சீனாவில் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. இதே நிலை நீடிட்தால் 2050ல் சீன மகக்ள் தொகை 131.3 கோடியாக குறைந்து, 2100ல் 80 கோடியாக வீழ்ச்சியடையும் என்று ஐ.நா ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இதன் விளைவாக மனிதவளம் குறைந்து, உலகின் தொழில் கேந்திரமாக திகழும் சீனாவில் இருந்து, இந்தியா உள்ளிட்ட இதர நாடுகளுக்கு உற்பத்தி நிறுவனங்கள் இடம் பெயரும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்