கலைஞர் கோட்டம் திறப்பு - இன்று திருவாரூர் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Update: 2023-06-18 04:52 GMT

திருவாரூர் அருகே காட்டூரில் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று மாலை திருவாரூர் செல்கிறார்.

திருவாரூர் மாவட்டம், காட்டூரில் சென்னை தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில், 7 ஆயிரம் சதுர அடியில் ரூ.12 கோடி மதிப்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இதில் அருங் காட்சியகம், திருமண மண்டபம், முத்துவேலர் நூலகம், கருணா நிதியின் உருவச் சிலை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. திருவாரூர் தேர் வடிவில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை, ஜூன் 20-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்று திறந்து வைக்கிறார். முத்துவேலர் நூலகத்தை துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைக்கிறார். இதில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து திருவாரூர் சென்று தங்குகிறார். திங்கள்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், செவ்வாய்க்கிழமை மாலை கலைஞர் கோட்டம் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்