தாய் வீட்டில் வசித்த மனைவியை தேடிச்சென்று வெட்டிய கணவன் - மதுரை அருகே பயங்கரம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பள்ளப்பட்டியை சேர்ந்தவர் செளந்திரபாண்டி. இவருக்கு தங்கமீனா என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட குடும்பத் தகராறில் கணவனும், மனைவியும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், மனைவியை சந்திக்க அவருடைய தாய் வீட்டிற்கு செளந்திர பாண்டியன் சென்றுள்ளார். அங்கு, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்ட நிலையில், மனைவியை செளந்திரபாண்டி அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், செளந்திர பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.