அரசின் ரகசியங்களை விற்க முயன்ற ஓசூர் இன்ஜினியர் அதிரடி கைது

Update: 2023-03-05 02:23 GMT
  • அரசின் ரகசியங்களை வெளிநாட்டு ஏஜன்சிக்கு விற்க முயற்சி செய்ததாக, ஓசூர் அருகே பொறியியல் பட்டதாரியை போலீசார் கைது செய்தனர்.
  • ஓசூரை அடுத்த பைரகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணா ரெட்டியின் மகன் உதயகுமார், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூரில் உள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆய்வகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றினார்.
  •  பணியின்போது, ஆய்வகத்தில் இருந்த ரகசியம் ஆவணங்களை அவர் தனது செல்போனில் படம் எடுத்ததாகத் தெரிகிறது.
  • பணியில் இருந்து வெளியேறிய பிறகு, அந்த ஆவணங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏஜென்சிகளுக்கு அவர் விற்பனை செய்ய முயற்சி செய்வதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
  • அவர்களின் உத்தரவைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையினர், மதகொண்டப்பள்ளி அருகே உதயகுமாரைக் கைது செய்தனர்.
  • அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்த போலீசார், பின்னணியில் இருக்கும் ஏஜென்சிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்