நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவமனை ஊழியர் கைது

Update: 2022-09-18 02:53 GMT

தஞ்சை மருத்துவமனையில் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவமனை ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ராபர்ட் எடிசன் என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுக்குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த தகவலின் அடிப்படையில், ஊழியரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்