செவிலியரை கொலை செய்து தீ வைத்து எரித்த கொடூர சம்பவம் - அதிர்ச்சி கொடுத்த கணவன்
பாளையங்கோட்டையில் செவிலியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது கணவர் கோவில்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே, அய்யம்மாள் என்ற செவிலியர் கத்தியால் குத்தி தீ வைத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்த நிலையில், செவிலியரின் கணவர் பாலசுப்ரமணியம் என்ற அக்பர் இப்ராகிம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் அய்யமாளை கொலை செய்துவிட்டு, நெல்லையில் இருந்து டூவீலரில் கோவில்பட்டிக்கு வந்து கணவர் சரணடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.