செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மதுராந்தகம், செய்யூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.