ஊட்டியில் 3வது நாளாக சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது... அதிகபட்சமாக அவலாஞ்சியில் 144 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர் மழை காரணமாக அவலாஞ்சியில் புதிதாக நீர்வீழ்ச்சி உருவாகி மலை முகடுகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி ரம்மியமாக காட்சியளிக்கிறது... அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு அணைக் கட்டுகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.