``ரூ.400 வந்த வீட்டுக்கு ரூ.12000 பில்'' ஷாக் அடித்த EB பில்- சுத்துப்போட்ட மக்கள் -பரபரப்பு காட்சி
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மின்கட்டணம் தொடர்பாக அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். லெப்பைக் குடிக்காடு பகுதியில், 4 குடும்பங்கள் வசித்து வரும் வீடுகளின் 4 மீட்டர்களை ஒரே மீட்டராக கணக்கிட்டு, மின் கட்டணமாக மூவாயிரம் ரூபாய்க்கு மேல் கட்ட அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மின்சார அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், பிரச்சினைக்கு இரண்டு நாட்களில் தீர்வு எட்டப்படும் என உறுதியளித்தனர்.