புதுச்சேரியில் பெய்த வரலாறு காணாத மழையில் பல்வேறு இடங்கள் தண்ணீரில் முழ்கின. தொடந்து வீடுர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் புதுச்சேரி நோனாங்குப்பம் பகுதியில் உள்ள சங்கராபரணி ஆற்றங்கரை ஒட்டியுள்ள ஆற்றங்கரை வீதி, தண்ணித் தொட்டி வீதி ஆகிய பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து இடுப்பளவு நீர் தேங்கி இருந்தது. இதன் காரணமாக படகுககள் மூலம் சிக்கி இருந்த பொதுமக்களை தீயணைப்பு துறையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் வெள்ளம் இன்று முழுமையாக வடிந்த நிலையில் அப்பகுதி மக்கள் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.