“என் தாலிய கூட வச்சிக்கோங்க.. என் வீட்டுக்காரு இறப்பு சான்றிதழ கொடுங்க“ - கலங்க வைக்கும் காட்சிகள்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் இறப்பு சான்றிதழ் வழங்காததால், 11 மாதமாக அலைக்கழித்து வருவதால் திலகவதி என்பவர் தனது தாலியை கையூட்டு ஆக வைத்துக் கொண்டு சான்றிதழ் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.