குஜராத் தேர்தல்..பாஜக தலைவிதியை நிர்ணயிக்கும் 4 முக்கிய விஷயங்கள்-காப்பாற்றுமா பிரதமரின் செல்வாக்கு?
27 ஆண்டுகளாக பாஜக ஆட்சியிலிருக்கும் குஜராத்தில், இம்முறை பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடி பிரதமரான பின்னர், படேல் சமூக மக்கள் போராட்டத்திற்கு மத்தியில் நடந்த 2017 தேர்தலில் கட்சி வெற்றிபெற்ற தொகுதிகள் எண்ணிக்கை இரட்டை இலகத்திற்கு மாறியது. இப்போது பாஜக ஆதிக்கம் செலுத்தும் நகர்புற வாக்கை ஆம் ஆத்மி குறிவைப்பதால் களம் அனல்பறக்கிறது. இதற்கிடையே மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் சில முக்கிய விஷயங்களும் அங்கு உள்ளன.