நாளை விண்ணில் பாய்கிறது GSLV F-12 ராக்கெட் | ISRO

Update: 2023-05-28 16:44 GMT

இஸ்ரோ சார்பில், ஜி.எஸ்.எல்.வி. எஃப். 12 ராக்கெட், இந்திய நேரப்படி நாளை காலை 10.42 மணிக்கு, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த ராக்கெட்டின் மூலம் NVS-01 என்கிற 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட வழிகாட்டும் வகை செயற்கைக்கோள் செலுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள் இரண்டாம் தலைமுறை தொழில்நுட்பம் கொண்ட வழிகாட்டும் செயற்கைக்கோளாகும். நிலம் மற்றும் கடற்பரப்பில் பயணிக்கும் இடம் மற்றும் தொலைவை மிகவும் துல்லியமாக கணிக்க முடியும் என கூறப்படுகிறது. ஜி.எஸ்.எல்.வி வகை ராக்கெட்டின் 15ஆவது விண்வெளி பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்