கன்னியாகுமரியில் போதையில் 80 வயது பாட்டியை ஓட்டால் அடித்த சைக்கோ பேரன்..!.. சம்பவ இடத்திலே சரிந்தபடி பலி
- குமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலவிளை பகுதியை சேர்ந்தவர் 80 வயதான தங்கபழம்.
- இவரின் மகள் வழி பேரனான 29 வயதான சஜின் வேலைக்கு செல்லாமல் மது பழக்கத்திற்கு அடிமையானவர்.
- இந்த பழக்கத்தில் இருந்து விடுபட அவரின் தாய் மருந்து கொடுத்து வந்ததால் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது.
- இதனால் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டு வந்திருக்கிறார் சஜின்.
- சம்பவத்தன்று தன் பாட்டி வீட்டிற்கு சென்ற சஜின், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அங்கிருந்த வீட்டின் ஓட்டை எடுத்து அவரின் தலையில் அடித்துக் கொலை செய்தார்.
- பின்னர் சடலத்தின் அருகே அவர் அமர்ந்து கொண்டிருந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.
- இதன்பேரில் மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்டதோடு சஜினிடம் விசாரணையும் நடந்து வருகிறது.