ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கை என மதுரை எம்.பி. வெங்கடேசன் கூறி உள்ளார். மதுரையில் பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தர ராஜனின் வெண்கல சிலை அமைப்பதற்கான பணிகளை மதுரை எம்.பி வெங்கடேசன், எம்.எல்.ஏக்கள் தளபதி, பூமிநாதன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த வெங்கடேசன், தமிழக அரசு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க இருப்பதை அறிந்து, உடனடியாக தனது உத்தரவை ஆளுநர் வாபஸ் பெற்றதாகக் கூறினார்.