"அப்பாவி டிரைவரை தாக்கிய ஆளுநர் மாளிகை ஊழியர்" "பொய் கேஸ் போடுவோம்னு மிரட்டும் போலீஸ்" கண்ணீர் வடிக்கும் டாக்சி டிரைவர் நடந்தது என்ன..?
சென்னையில் டாக்சி ஓட்டுநரை கன்னத்தில் அறைந்ததாக ஆளுநர் அலுவலக ஊழியர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கால் டாக்ஸி ஓட்டி வரும் திருநாவுக்கரசு என்பவர், நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில், முன்பதிவு செய்த அழைப்பில் குறிப்பிட்ட நேரத்தில் டிரிப்பை முடிக்க வேண்டும் எனக்குறிப்பிட்ட வாடிக்கையாளர், நண்பர்களை பார்க்க போகிறேன், சாப்பிட போகிறேன் எனக்கூறி தாமதப்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேட்டப்போது, அந்த வாடிக்கையாளர் தன்னுடன் வாக்குவாதம் செய்ததோடு, திடீரென தாக்கியதாகவும் காவல்நிலையத்தில் கால் டாக்ஸி ஓட்டுநர் திருநாவுக்கரசு புகார் அளித்துள்ளார்.
போலீசார் விசாரணையில் அந்த வாடிக்கையாளர், ஆளுநர் அலுவலக ஊழியர் என்பது தெரியவந்துள்ளது.