ஐஐடியில் இனி அரசு பள்ளி மாணவர்களும் கற்கலாம்! - மாணவர்கள் எதிர்காலத்தை பிரகாசமாக்கும் திட்டம்

Update: 2023-04-06 23:18 GMT

அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்னணு அறிவியல் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளிக்கும் மெகா திட்டத்தை கையில் எடுத்துள்ளது, ஐஐடி. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

ஐஐடி - இந்தியாவின் சிறந்த கல்வி நிலையங்களுள் ஒன்று. மிக நன்றாக படிக்கக்கூடிய பல மாணவர்களின் கனவு... ஐஐடியில் படித்து தங்களின் லட்சியத்தை அடைய வேண்டும் என்பதாகவே இருக்கிறது.

ஐஐடியில் படித்தால் பன்னாட்டு நிறுவனங்களில் கோடிகளில் சம்பளம் பெறலாம் என்பது இதற்கு ஒரு காரணம். இனி நாமெல்லாம் அங்கு படிக்க முடியாது என தங்களை தாங்களே அரசு பள்ளி மாணவர்கள் சிறிய வட்டத்திற்குள் சுருக்கி கொள்ள வேண்டிய தேவையில்லை.

குறிப்பாக, சென்னை ஐஐடியின் இயக்குனராக காமகோடி பதவி ஏற்றதற்கு பிறகு, தமிழக அரசுடன் இணைந்து பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது, சென்னை ஐஐடி. டேட்டா சயின்ஸ் என்ற பாடத்திட்டத்தில், அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் ஆன்லைன் வழியில் படித்து வருகின்றனர்.

மேலும், மாநிலம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அதோடு, அறிவியல் துறை சார்ந்து அரசு பள்ளி மாணவர்கள் புதிய புதிய கண்டுபிடிப்புகளை வீடியோ மேக்கிங் செய்வதற்கான பயிற்சியும் ஐஐடி அளித்து வருகிறது.

அந்த வரிசையில், இனி வரும் காலங்களில் மின்னணு அறிவியல் தொழில்நுட்பத்திற்கு தான் மிக பெரிய எதிர்காலம் என கூறும், சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி, ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு மின்னணு அறிவியல் தொழில்நுட்பம் குறித்து நான்கு ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக பயிற்சி அளிக்கும் மெகா திட்டத்தை தங்களின் கனவு திட்டமாகவே பார்க்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்