ஊதியூர்மலை பகுதி அடிவாரத்தில், கடந்த 3ஆம் தேதி மர்ம விலங்கு கடித்ததில், ஆடு ஒன்று உயிரிழந்தது. இதனிடையே, ஆடு இறந்த இடத்தை சுற்றி ஐந்து இடங்களில், அதிநவீன தொழில் நுட்ப கேமரா பொருத்தி சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினர் கண்காணிக்க தொடங்கினர். அந்த கேமராவில் எந்த காட்சிகளும் பதிவு ஆகாத நிலையில், ஆனைகல் தோட்டத்தில் ஏழு மாத கன்றுக்குட்டியை சிறுத்தை கொன்றது கண்டறியப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், அந்த பகுதியில் இரண்டு கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர். சிறுத்தையின் நடமாட்டம் இருந்தால், கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்திருப்பதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.